செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானின் சுழலில் சிக்கியது ஸ்கொட்லாந்து!

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானின் சுழலில் சிக்கியது ஸ்கொட்லாந்து!

1 minutes read

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 17ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழு-2 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா 59 ஓட்டங்களையும் குர்பாஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், சப்யான் செரீப் 2 விக்கெட்டுகளையும் டேவே மற்றும் மார்க் வாட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, 10.2 ஓவர்கள் நிறைவில் 60 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோர்ஜ் முன்சே 25 ஓட்டங்களையும் கிறிஸ் க்ரேவ்ஸ் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஜிப்புர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 4 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஜிப்புர் ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.