செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு லா லிகா: லெவண்டே- அத்லெடிகோ மட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

லா லிகா: லெவண்டே- அத்லெடிகோ மட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

0 minutes read

லா லிகா கால்பந்து தொடரின் 11ஆவது கட்டப் போட்டியில், லெவண்டே- அத்லெடிகோ மட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

சியுடாட் டி வலென்சியா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டி, 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதில் லெவண்டே அணி சார்பில், எனிஸ் பார்தி 37ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், 90ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தார்.

அத்லெடிகோ மட்ரிட் அணி சார்பில், அன்டானியோ கிறிஸ்மேன் 12ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மாதியஸ் குன்ஹா 76ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிப் பட்டியலில், அத்லெடிகோ மட்ரிட் அணி 19 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், லெவண்டே ஆறு புள்ளிகளுடன் 19ஆவது இடத்திலும் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.