செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி!

ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி!

1 minutes read

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 35ஆவது போட்டியில், இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த ஆறுதல் வெற்றியுடன் இலங்கை அணி நடப்பு ரி-20 உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க 68 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஆந்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் பிராவோ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பினுர பெனார்டோ, சமிக கருணாரத்ன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 41 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.