செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

1 minutes read

லண்டனில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் சீமாட்டிகள் (மகளிர்) ஒற்றையர் பிரிவில் செச்சியா வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவும்,  சீமான்கள்  (ஆடவர்) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜனிக் சின்னரும் சம்பயின் பட்டங்களை சுவீகரித்தனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தூய்மையின் அடையாளமாக வெண்ணிற ஆடைகளுடன் வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதுடன் அவர்கள் சீமான்கள் எனவும் சீமாட்டிகள் எனவும் அழைக்கப்படுவார்கள்.

சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் இரண்டு செச்சியா (செக் குடியரசு) வீராங்கனைகள் மோதினர்.

மூன்று செட்கள்வரை நீடித்த இந்த இறுதிப் போட்டியில் கரோலினா முச்சோவாவை 2 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் லிண்டா நோஸ்கோவா வெற்றிகொண்டு முதல் தடவையாக சம்பியனானார்.

இதன் மூலம் கடந்த நான்கு வருடங்களில் விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவில் சம்பியனான மூன்றாவது செக் வீராங்கனை என்ற பெருமையை லிண்டா பெற்றுக்கொண்டார்.

முதலாவது செட்டில், 6 – 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்  லிண்டா  வெற்றிபெற்றார்.

அடுத்த செட்டை 7 – 5 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கிய கெரோலின் உரிய பதிலடி கொடுத்தார்.

ஆனால், தீர்மானம் மிக்க கடைசி செட்டில் லிண்டா மிக இலகுவாக 6 – 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினார்.

ஜனிக் சின்னர் சம்பியன்

சீமான்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜேர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வை 3 – 1 செட்கள் கணக்கில் வெற்றிகொண்ட இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக சம்பியனானார்.

விம்பிள்டன் மத்திய ஆடுகளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இருவருக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் இரண்டு செட்களிலும் இருவரும் கடுமையாக மொதிக்கொண்டனர். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் சின்னர் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றார்.

சமநிலை முறிப்பு வரை நீடித்த முதலாவது செட்டில் 7 (9) – 6 (7) என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்வேரெவ் வெற்றிபெற்றார்.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் சின்னர் வெற்றிபெற்று சம்பியனானார்.

இரண்டவது செட்டும் சமநிலை முறிப்புவரை நீடித்தது. இதில் சின்னர் 7 (7) – 6 (2) என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

இதன் காரணமாக அடுத்தடுத்த செட்கள் பரபரப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்த இரண்டு செட்களிலும் முறையே 6 – 3, 6 – 4 என வெற்றிபெற்ற  சின்னர்   சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.