இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான சுப்பர் லீக் சம்பியன்ஷிபின் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய பேருவளை ரெட் ஸ்டார் கழகம் கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.
சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்ல ரெட் ஸ்டார் கழகத்துக்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படும் நிலையில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சியை எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை ரெட் ஸ்டார் கழகம் விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 2 தொல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 5ஆம் இடத்தில் இருக்கிறது.
டிபெண்டர்ஸ் எவ்சி தனது 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மாத்திரமே ஈட்டியுள்ளது. ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட டிபெண்டர்ஸ் எவ்சி, மற்றைய 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.
இதன் படி 4 புள்ளிகளுடன் டிபெண்டர்ஸ் எவ்சி 8ஆம் இடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகள், அவை போட்டிருக்கும் கோல்கள் ஆகிய ன இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதைக் காட்டுகிறது.
ஆகையால் இந்தப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.