செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 38 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

3 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

இவ்வாறு உணவுக்கான நெருக்கடி நிலை சற்று அதிகரித்துச் சென்றது. கிளிநொச்சி நகரை அண்டிய பிரதேசமும் அதன் மேற்கு புற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் அப்பகுதியில் நெற் செய்கை தோட்டசெய்கை அல்லது கால்நடைகள் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கிளிநொச்சி நகரில் இருந்து இடம்பெயர்ந்தாலும் தர்மபுரம் விஸ்வமடு பகுதியில் தற்காலிகமாக வசிக்கலாம் என எண்ணி இருந்தவர்களுக்கு அங்கு ஏற்ப்பட பதட்டத்தினால் இன்னுமோர் இடத்திற்கு இடம்பெயர்ந்து இவ்வாறான நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.

அக்காலத்தில் தர்மபுரம் பகுதியில் கிளிநொச்சி அரச அதிபர் பணிமனை தற்காலிகமாக இயங்கி வந்தது. பரந்தன் கிளிநொச்சி நகரம் 2008.12.30 திகதி அன்று இராணுவத்தின் பூரண கட்டுப்பக்குக்குள் வந்தது. ஒரு சில தினங்களின் பின்னர் 2008 தை மாத முதல் வாரத்திலேயே பரந்தனில் இருந்து தர்மபுரம் நோக்கி இராணுவம் முன்னேற ஆரம்பமானது. “ படை வரும் பின்னே செல் வரும் முன்னே” என்பதற்கு அமைய தை மாதம் இரண்டாம் வாரம் தர்மபுரம் நகரை அண்டிய பகுதியிலும் உள்ளூர் பிரதேசங்களிலும் ஆங்காங்கே விழுந்து வெடித்த செல்லினால் பெரும் பதட்டம் நிலவியது. மக்கள் செய்வது அறியாது திகைத்தனர்.

39
தர்மபுரம் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் விசுவமடு , உடையார்கட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரச் செய்ததன் மூலம் கிளிநொச்சி மாவட்ட பிரதேச எல்லைகள் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வர விசுவமடுவுக்கு அப்பால் இருக்கின்ற முல்லைத்தீவு மாவட்ட பிரதேசங்களுக்கு மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

சம நேரத்தில் கிளிநொச்சி அரச அதிபர் அவர்களையும் கரைச்சி, பூநகரி, கண்டவளை, பளை பிரதேச செயலர்களையும் அரசினால் வவுனியா பிரதேசத்துக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தர்மபுரம் பகுதியில் இருந்து மூங்கிலாறு பகுதிக்கு இடம்பெயர்ந்த கிளிநொச்சி அரச அதிபர் பணிமையின் பொருட்கள், உடைமைகளையும் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு பார்த்திபன் அவர்களிடம் கையளித்து விட்டு உயர் நிலை அரச அதிகாரிகள் 2009 தை மாதம் 11ம் திகதி வவுனியாவை சென்றடைந்தனர்.

இதே சமயம் 2008 மார்கழி மாதம் தொடக்கம் வவுனியாவில் தற்காலிகமாக இயங்கிய முல்லைத்தீவு அரச அதிபர் பணிமனையில் கடமையை மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்ட்ட சுகுமார் அவர்கள் புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதிக்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்த பின் 2008 தை 25ந் திகதி மீண்டும் வவுனியாவை சென்றடைந்தார்.

அதன் பின்னர் பொதுமக்களுக்கு உணவு வழங்கல் உட்பட வன்னி பகுதியில் இருந்து மக்களின் தேவைகளை ஒருங்கிணைத்து வழங்க வேண்டிய பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு பார்த்திபன் அவர்கள் யுத்தம் முடியும் வரை திறம்பட செயலாற்றினார்.

இதே சமயம் அரச உத்தியோகத்தர்களும் பல்வேறு தரப்பை சேர்ந்த உயர்நிலை உத்தியோகத்தர்களும் ஒருசில உள்ளூர் தொண்டு நிறுவன அதிகாரிகளும் வவுனியா சென்றடைந்தனர்.

 

 

 

தொடரும்….

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-35/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-36/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-37/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.