செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 40 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

4 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

10501808_10206335805246727_292612762823540014_n (1)

விசுவமடு, தர்மபுரம் பகுதியில் இருந்து மக்கள் சடுதிய வெளியேறி உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுரம் பகுதிகளை வந்தடைந்தனர். மூங்கிலாறுக்கும் உடையார்கட்டுக்கும் இடைப்பட்ட வயல் பகுதியூடாக அமைந்த ஒரு பதையூடாகவே மக்கள் போக்குவரத்து செய்யவேண்டி இருந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீதியின் இரு மருங்கிலும் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்த வயல்கள் பச்சைப்பசேல் என காட்சியளித்தது. இக் காலப்பகுதி மார்கழி மாதம் என்பதால் அடிக்கடி மழையும் பெய்து வந்தது. இதனால் மக்கள் வீதியை விட்டு விலகி வயல் வெளியூடாக’ பயணிக்க முடியாது இருந்தது. ஆனால் கடுமையான நெருக்கடி ஏற்படுகின்ற வேளையில் மக்கள் வயல் வெளியூடாக பயணித்தனர். வீதியின் ஓர் இடத்தில் காணப்பட்ட ஒடுங்கிய பாலம் மக்கள் பயணிப்பதற்கு பெரும் இடையூறாக இருந்தது.

உடையார்கட்டு மகா’வித்தியாலையத்தில் இயங்கிய தற்காலிக வைத்தியசாலை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய வண்ணம் இருந்தது. ஏறிகணை வீச்சில் அகப்பட்ட பொது மக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கொண்டிருந்தனர். பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேற்பகுதியில் இடம்பெயர்ந்த வைத்தியசாலை தொழிற்பட்டது. அக்கட்டிடத்தின் முற்பகுதியில் தகரத்திலான கொட்டைகைகள் அமைக்கப்பட்டு காயமடைடந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில சமயங்களில் பலர் காயங்களினால் சிகிச்சைக்கு எடுத்து வரப்பட்டதன் காரணமாக மைதான புல்வெளியில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.

11219717_10206335807126774_5721657818889197490_n

பாடசாலையின் முன்பகுதியில் வாகன தரிப்படமும் தற்காலிக களஞ்சிய அறையும் அமைக்கப்பட்டு இருந்தது. மைதானத்தின் மேற்கு பக்கத்தில் சுமார் 2000 வரையான குடும்பங்கள் வைத்தியசாலை பாதுகாப்பானது என கருதி சிறு குடிசைகளை அமைத்து தங்கியிருந்தனர். கட்டிடத்தின் மேற்ப்பகுதியில் கிளிநொச்சி சுகாதார பணிமனையும் கிளிநொச்சி கல்வி திணைக்களமும் இயங்கி வந்தது. சில நாட்கள் அப்பகுதிக்கு அப்போதைய கல்வி பணிப்பாளர் திரு. குருகுலராஜா அவர்கள் வந்து சென்றார்.

இவ்வாறு இருக்கின்ற போது இந்த தற்காலிக வைத்தியசாலையின் அமைப்பு தொடர்பாக உடையார் கட்டு இருட்டுமடு வீதிக்கு அருகில் இருந்த கட்டிடம் சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. நான் இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளை பார்வை இடுவதற்காக மூங்கிலாறு வைத்தியசாலைக்கு சென்ற போது DR. கதிர்செல்வம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதை கண்டேன். அப் பகுதிக்கு அருகில் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். அவர்களுக்கு என்னால் முடிந்த அனுசரணையை வழங்கி திரும்பிக்கொண்டு இருந்தேன். அப்போது மூங்கிலாறு பாலத்திற்கு நேர் எதிரே பயணித்த பொருட்களை ஏற்றிய உழவு இயந்திரம் செல் வீச்சுக்கு இலக்காகி சின்னா பின்னமாகி இருந்ததை கண்டேன். மக்கள் பதட்டத்துடன் பயணிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

11659251_10206335808486808_2316434688694482422_n

நான் சென்ற வாகனம் அப்பகுதியை கடந்து உடையார்கட்டு நோக்கி சென்று பாடசாலை வளாகம் நோக்கி திரும்பியது. பாடசாலை கேற்றினுாடாக உள் நுழையும் போது பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. வாகன சாரதி திரு. சிவராசா அவர்களும் நானும் வாகனத்தில் பயணித்த வேளை இச் சத்தத்தினால் வாகனத்தில் இருந்த எமக்கும் சடுதியான தாக்கு விசையை உணரக்கூடியதாக இருந்தது. சற்று நேரம் பாதுகாப்பை கருதி இருந்து விட்டு பின் பிரதான வாயிலை கடந்து திரும்பி என்ன நடந்தது எனப் பார்வையிட்டேன்.

உழவு இயந்திரம் ஒன்றின் மீது செல் வீழ்ந்து வெடித்து அதனை சின்னா பின்னமாக்கி இருப்பதைக் கண்டேன் அதில் பயணித்தவர்களின் உடல் உறுப்புகளை கூட காணவில்லை. மேற்ப்படி வெடிப்பு ஒலிஅங்கு இருந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு பதட்டத்தை ஏற்ப்படுத்தியது. அவ் இடத்தில் தங்கியிருந்த மக்களும் ஏனையோரும் அடுத்து என்ன செய்வது என தெரியாது தவிர்த்தனர்…………….

 

 

தொடரும்….

 

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-35/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-36/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-37/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-38/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-39/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.