செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை சிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள் | மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கைசிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள் | மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை

சிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள் | மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கைசிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள் | மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை

2 minutes read

ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு தூண்டும் வகையில் ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்கள். 18 படங்களிலும் மொத்தமாக சிகரட் மற்றும் மதுசார வகைகளை விளம்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். இந்த நேர அளவானது ஒரு தனி திரைப்படத்திற்குரிய நேர அளவு என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக சிகரட்டை விளம்பரப்படுத்திய திரைப்படம் மாரி.

இத்திரைப்படத்தில் மதுசாரம் மற்றும் சிகரட் விளம்பரமாகிய மொத்த நேரம் 21.97 நிமிடங்கள், சிகரட் விளம்பரமாகிய நேரம் 18.22 நிமிடங்கள் ஆகும். இத்திரைப்படத்தில் அதிக இரசிகர்களைக் கவர்ந்த, நடிகர் தனுஷ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலாபத்தை எட்டிய திரைப்படமென்பதுடன், திரைப்பட விளம்பர காணொளியில் சிகரட் விளம்பரம் கவர்ச்சிகரமான விதத்தில் காட்டப்பட்டிருந்தது.

கூடுதலாக மதுசாரத்தை விளம்பரப்படுத்திய திரைப்படம்  வாசுவும் சரவணனும். இத்திரைப்படத்தில் மதுசாரம் விளம்பரமாகிய நேரம் 24.57 நிமிடங்கள் ஆகும். மேலும் நகைச்சுவை நடிகர் சந்தானம், பிரபல நடிகர் ஆர்யா இருவரும் தங்களின் கலைத்திறமையை உயர்ந்தளவில் பாவித்து மதுசாரத்தை விளம்பரப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதில் இறுதிக் கட்டத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் தோன்றி பியர் குடிக்கும் விதத்தை விளக்கியிருப்பதானது மதுசார ஆர்வத்தை தூண்டக்கூடிய குறிப்பிட்ட கம்பனிகளினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரமாகவே கருதப்படுகின்றது. 18 திரைப்படங்களில் 17 திரைப்படங்கள் மதுசாரம், சிகரெட் உட்பட ஏனைய போதைப் பொருட்களை விளம்பரப்படுத்தியிருக்கின்றன.

“இது என்னமாயம்’ என்ற திரைப்படம் மாத்திரமே எந்தவிதமான போதைப் பொருள் விளம்பரங்களும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த திரைப்பட நேரத்தில் சாராயம் 48 நிமிடங்கள், சிகரெட்  46.06 நிமிடங்கள், பியர் 46.12 நிமடங்கள், ஏனைய போதைப் பொருட்கள் 02.04 நிமிடங்களும் விளம்பரமாகியிருக்கின்றன.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியினுள் சந்தானம் என்ற நகைச்சுவை நடிகரே அதிக மதுசாரம் மற்றும் சிகரெட் விளம்பரங்களில் நடித்துள்ளார். மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 18 திரைப்படங்கள் வெளிவந்த அதே நேரத்தில் கூடுதலான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மதுசாரம் மற்றும் சிகரெட் போன்றவைகளும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்த நேரத்தில், காட்சிகளில் விளம்பரப்படுத்திய வீதம் 57.4 , பொதுவான வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய வீதம் 14.2, நகைச்சுவையின் மூலம் வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய வீதம்11.6. விசேட வார்த்தைகளின் மூலம் விளம்பரப்படுத்திய வீதம் 7.4. பாடல் வரிகளின் மூலம் விளம்பரப்படுத்திய வீதம் 11.6. ஆய்வு முடிவுகள் பற்றி, நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகரவும், திரைப்பட விளம்பரங்கள் சிறுவர்களைக் கவரும் விதம் பற்றி சிரேஷ்ட உளநல வைத்தியர் ஆ.கணேசனும், புகைத்தல் மற்றும் மதுசார பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக வைத்தியக் கலாநிதி அனுஷாந்தனும், திரைப்பட, ஊடக விளம்பரங்கள் மூலம் சிறுவர்கள் ஏமாறுவதைத் தடுக்க சமூகத்தினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதனும் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் குறிப்பிட்ட நிகழ்வின்போது போதைப் பொருள் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய “நிதர்சனம்’ என்ற பத்திரிகையொன்றும்  வெளியிடப்பட்டது.

நன்றி : தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.