இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற இலங்கைத் தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச் சென்றபோது அங்கு வைத்து கூலிக்கு அமர்த்தப்பட்ட மர்மநபர்களினால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் கணபதிப்பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சைலஜா, மகள் தர்ஷினி, இவர்களுக்கு சொந்தமாக வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் வசித்து வரும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவர்.

லண்டனில் உள்ள இவரது வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் , அவரது நண்பர் மற்றும் இவர்களால் கூலிக்கு அமர்த்திய குழு என முலு கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பொலிசார் மற்றும் தமிழ்நாட்டு காவல்துறையின் துரித நடவடிக்கையினால் இக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட தவராசா தம்பதியினர் தற்போது சென்னையில் பாதுகாப்பாக உள்ளனர். வன்முறைக்கலாச்சாரத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகின்ற இச் செயல் போன்று மேலும் நடைபெறாமல் இருக்க பிரித்தானியா தமிழர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டப்படுகிரார்கள்.

ஆசிரியர்