உலகளாவிய வங்கிகளிடைப் பணப் பரிமாற்றத்துக்கான தொலைத்தொடர்பு அமைப்பில் இருந்து ரஷ்யாவின் 7 வங்கிகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளியேற்றியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து அதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரஷ்யாவின் 7 வங்கிகளை ஸ்விப்ட் அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது.
இதேபோல் ஜெர்மனியைச் சேர்ந்த சரக்குப் போக்குவரத்து அமைப்பான டிஎச்எல் ரஷ்யாவுக்கும் பெலாரசுக்கும் பொருட்களைக் கொண்டுசென்று வழங்குவதில்லை என அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரின் எதிரொலியாக லண்டன் உலோகச் சந்தையில் ஒரு டன் அலுமினியம் விலை இதுவரை இல்லாத அளவில் 2 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது