செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது அந்தந்த நாட்டினைப் பொறுத்தது|இந்திய வெள்ளை மாளிகை

மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது அந்தந்த நாட்டினைப் பொறுத்தது|இந்திய வெள்ளை மாளிகை

0 minutes read

இந்தியா இம்மாதத்தின் முன்னரைப் பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 360,000 பீப்பாய்கள் வீதம் மசகு எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது என்று ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்ததைத் தொடர்ந்து மசகு எண்ணெய்யையும் ஏனைய பொருட்களையும் இந்தியாவுக்கு கழிவு விலையில் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான மசகு எண்ணெய் வர்த்தகம் நாளொன்றுக்கு சுமார் 203,000 பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை ஏனைய நாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டுமென கோரப்பட்டிருப்பதாக வெளியான அறிக்கைகளை நிராகரித்துள்ள வெள்ளை மாளிகை, ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது அந்தந்த நாட்டினைப் பொறுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.