சல்மான்ருஸ்டிமீது நியுயோர்க்கில் கத்திக்குத்து தாக்குதல் | கண்பார்வை பறிபோகும் ஆபத்து

நியுயோர்க்கில் கத்திக்குத்திற்கு இலக்கான சல்மான்ருஸ்டியின் நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் ; வெளியாகின்றன.

தற்போது செய்தி சிறந்ததாகயில்லை என அவரது முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேடையொன்றில் கத்திக்குத்திற்கு இலக்கான சல்மான் ருஸ்டிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகின்றது அவரின் ஒருகண் பார்வையிழக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்டேர்ன் நியுயோர்க்கில் பேட்டியொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் மேடையை நோக்கி ஒடி சல்மான் ருஸ்டி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியுஜேர்சி பெயர்வியுவை சேர்ந்த ஹடிமட்டார் என்ற 24 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சல்மான் தனது ஒருகண்ணின் பார்க்கும் திறனை இழக்ககூடும், கைநரம்புகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன அவரது ஈரல் கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது எனதகவல்கள் வெளியாகின்றன.

ஆசிரியர்