ஸ்பாடிஃபை நிறுவனத்தின் பணிநீக்க திட்டம்

பொருளாதார நெருக்கடி பல நிறுவனங்களில் தாக்கத்தை செலுத்திஉள்ளவேளையில் ட்விட்டர் ,கூகுள், அமேசான், பேஸ்ஃபுக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில் 2006 சுவீடனில் நிறுவப்பட்ட நிறுவனமான மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.


செயல்திறன்களை மேம்படுத்தும் முயற்சியாக, நிறுவனத்தில் உள்ள பத்தாயிரம் ஊழியர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிஃபை முடிவு செய்துள்ளது.


இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான தொகுப்பூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

ஆசிரியர்