Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள்

கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள்

0 minutes read

இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில், லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில், முதன்முறையாக இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம் உட்பட சில விலையுயர்ந்த பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்காட்சியில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.

லண்டன் டவரின் குடியுரிமை ஆளுநரான ஆண்ட்ரூ ஜாக்சன், ‘இந்த அற்புதமான சேகரிப்பைப் பற்றிய சிறந்த புரிதலை இந்த முயற்சி வழங்கும்’ என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More