செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கொரிய இளம் பாடகர் திடீர் மரணம்

கொரிய இளம் பாடகர் திடீர் மரணம்

0 minutes read

தென்கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார். மூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயது ஆகும்.

கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என முதல் கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலமாக, கொரியாவில் பாடகர்களும் இளம் நடிகர்களும் மர்மமான முறையில் மரணிப்பது தொடர்கதையாகி உள்ளது.

2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஃபெண்டாஜியோ லேபிள் டிரெய்னிங்கில் பாடகராக அறிமுகமானவர் மூன்பின் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.