செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தியாவில் வறுமை ஒழிகிறது: ஐ.நா அறிக்கை

இந்தியாவில் வறுமை ஒழிகிறது: ஐ.நா அறிக்கை

1 minutes read

வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஎன்டிபி எனப்படும் ஐ.நா வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன.

இந்தியாவில் வறுமை நிலைவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா உட்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியா, சீனா, காங்கோ, ஹொண்டூராஸ், இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.

ஐ.நா புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சியது.

இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி என்றளவில் உள்ளதாக ஐ.நாவின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது.

அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005இல் 44.3% ஆக இருந்த நிலையில் 2019/2021- ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.