செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மலையேறியின் உடல் பாகங்கள்

37 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மலையேறியின் உடல் பாகங்கள்

0 minutes read

Swiss Alps மலைப்பகுதியின் பனியோடையில், 1986ஆம் ஆண்டில் காணாமல்போன ஜெர்மன் மலையேறியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் பனியோடைகள் வேகமாக உருக ஆரம்பித்துள்ள நிலையில், அதன் விளைவாகப் பல வருடக்காலமாகப் பனியில் புதையுண்ட மனித உடல் பாகங்கள் வெளியில் தெரிகின்றன.

இந்த நிலையில், மனித பாகங்களையும் மலையேறும் சாதனங்களையும் ஜூலை 12ஆம் திகதி சில மலையேறிகள் Theodule பனியோடையில் கண்டுபிடித்தனர்.

பின்னர், அவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மரபணுப் பரிசோதனையின்போது அவை 1986ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் காணாமல்போன மலையேறியின் உடல் பாகங்கள் என்று உறுதிசெய்யப்பட்டன.

1986ஆம் ஆண்டில் அந்த மலையேறிக்கு 38 வயது என்றும் மலையேறச் சென்ற அவர் திரும்பி வராத நிலையில், அவரைத் தேடும் முயற்சிகளும் பலன் தரவில்லை என்று கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.