1
மெக்சிகோவின் மிக உயரமான Pico de Orizaba மலையில் ஏறிக்கொண்டிருந்த நால்வர் விழுந்து உயிரிழந்தனர்.
5,600 மீட்டர் உயரங்கொண்ட பிக்கோ டெ ஒரிசபா என்ற மலை, வட அமெரிக்காவின் அதிக உயரமான எரிமலை ஆகும்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி தொடர்வதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்தது.
மலையின் தென்புறப் பகுதியிலிருந்து ஏறியபோது இந்த விபத்து நேர்ந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.