நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு (Chris Hipkins) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அவர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.
கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படும் வரை 5 நாள்கள் ஹிப்கின்ஸ் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் நேரடிப் பிரசாரத்தில் அவர் ஈடுபட மாட்டார்.
ஆனால், காணொளி மூலம் அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடும் என்று அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது.