Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடா அரசுக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்க கூகுள் இணக்கம்

கனடா அரசுக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்க கூகுள் இணக்கம்

0 minutes read

கனடா அரசுக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

online செய்திப் பிரசூரம் குறித்த கனடா சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கால் செயின்ட் ஓன்ஞ் இது குறித்து அறிவித்துள்ளார்.

இணைய வழி செய்தி ஊடகங்களை பாதுகாக்கும் நோக்கில் லிபரல் அரசாங்கம் பில் சீ18 எனும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் கனடாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தன.

கூகுள் நிறுவனம், கனடாவில் செய்திகளை முடக்குவதற்குத் தீர்மானித்திருந்தது.

எனினும், கனடா அரசாங்கத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, வருடாந்தம் 100 மில்லியன் டொலர் கொடுப்பனவு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More