செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் புலம்பெயர்ந்தோர் ஹோட்டல்களுக்கு வெளியே தொடரும் போராட்டங்கள்; மேலும் 15 பேர் கைது!

புலம்பெயர்ந்தோர் ஹோட்டல்களுக்கு வெளியே தொடரும் போராட்டங்கள்; மேலும் 15 பேர் கைது!

1 minutes read

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல்களுக்கு வெளியே நடந்த போராட்டங்களையடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலண்டன், நியூகேஸில் மற்றும் மான்செஸ்டர் நகர மையத்தில் ஒரு பேரணிக்கு முன்பு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் குழுக்களும் எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொண்டனர்.

தலைநகரில் 09 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் பொது ஒழுங்குச் சட்ட நிபந்தனைகளை மீறியதற்காக கைதுசெய்யப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களாகவே புலம்பெயர்ந்தோர் ஹோட்டல்களுக்கு வெளியே தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி : புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை!

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு, 400க்கும் மேற்பட்டதாக இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஹோட்டல்களின் எண்ணிக்கை தற்போது 210ஆக குறைந்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2029ஆம் ஆண்டுக்குள் புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க ஹோட்டல்களைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களையும் இது அறிவித்துள்ளது. இது ஆண்டுக்கு £1 பில்லியன் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.