செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஹிரோஷிமா நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அணுவாயுத நாடுகள்!

ஹிரோஷிமா நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அணுவாயுத நாடுகள்!

1 minutes read

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தி நேற்றுடன் (06) 80 ஆண்டுகள் ஆகியன.

அந்நிகழ்வைக் குறிக்க ஹிரோஷிமாவில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

80 ஆண்டுக்கு முன் இதே நாளில் காலை 8.15க்கு அமெரிக்கப் போர் விமானம் ஹிரோஷிமா மீது “Little Boy” என்ற அணுக்குண்டை வீசியது.

சுமார் 140,000 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதை நினைவுகூர நேற்றுக் காலை 8.15க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி : ஜப்பானில் அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள்; நினைவஞ்சலிகள் ஏற்பாடுகள்!

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எனினும், அணுவாயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளான ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் இக்கூட்டத்திற்கு வரவில்லை.

தைவான், பாலஸ்தீன வட்டாரத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதன்முறையாகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை 8 மணி 15 நிமிடங்களுக்கு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. மூன்று நாட்கள் கழித்து, ஜப்பானின் தெற்கில் உள்ள நாகசாகியிலும் குண்டு வீசப்பட்டது. இதுவே வரலாற்றில் போரின் போது அணுஆயுதம் பயன்படுத்தப்பட்ட ஒரே தருணமாகும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.