செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நேப்பாளத்தின் தற்காலிக பிரதமராக சுஷிலா கார்க்கி பதவியேற்றார்

நேப்பாளத்தின் தற்காலிக பிரதமராக சுஷிலா கார்க்கி பதவியேற்றார்

1 minutes read

நேப்பாளத்தில் தற்காலிகப் பிரதமராகத் சுஷிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.

நேப்பாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்குச் சுமார் ஒரு வாரமாக அங்கு பெரும் கலவரம் வெடித்தது.

இதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 12,000க்கும் மேற்பட்ட கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி :  முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை; நேபாளத்தில் அவசர நிலைமை!

பொதுமக்கள் கொடுத்த நெருக்கடியில், கே.பி. ஷர்மா ஒலி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து நேப்பாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான 73 வயது சுஷிலா கார்க்கி, புதிய பிரதமராக சுமார் 6 மாதத்திற்கு அரசாங்கத்தை வழிநடத்துவார்.

நேப்பாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சுஷிலா கார்க்கி?

நேபாளத்தின் அரச கடும்போக்குகளுக்கு எதிராக துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியவர்.

ஒரு தடவை பொலிஸ் தலைமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய அவர், குறித்த நியமனம் முறையற்றது என்றும், தகுதியின் அடிப்படையில் அது சிரேஷ்ட அதிகாரிக்கு செல்லவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

அதற்காக ஆளும்தரப்பு அவரை பதவி நீக்க முயன்றது, சுமார் 250 பேர் கையெழுத்திட்டனர்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த துணிச்சலான உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சுஷீலா.

அதற்காக அந்நாட்டில் ஆளும்தரப்பின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முதலாவது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இவரே உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.