தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்தியா – அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் மக்கள் 2.6 மில்லியனுக்கு மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், அதே இடத்தில் 2,128 பேர் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்தும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (19) மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெற்றது.
உத்தரப் பிரேதச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் (Yogi Adityanath) அதில் கலந்துகொண்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு அயோத்தியில் சுமார் 2.51 மில்லியன் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.