பர்மிங்காம் நகர மையத்தில் ஒரு பெண் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
West Midlands பொலிஸாரின் தகவலின்படி, Djeison Rafael என்ற 21 வயதுடைய, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கருப்பின நபர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொலை முயற்சி குற்றச்சாட்டுடன், அவர் மேலும் இரண்டு தாக்குதல்கள் தொடர்பாகவும் மற்றும் ஒரு கத்தியை வைத்திருந்ததற்காகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குச் சற்று முன்னர், Smallbrook Queensway என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாகக் கிடைத்த அழைப்பின் பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்டவர், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கழுத்தில் கடுமையான காயம் காரணமாக அபாயகரமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் ‘முன்யோசனையற்ற தாக்குதல்’ என விவரிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட Djeison Rafael, சாம்பல் நிற விளையாட்டு ஆடை (grey tracksuit), கருப்பு தொப்பி, பயிற்சி காலணிகள் (trainers), மற்றும் ஒரு பையுடன் (rucksack) இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கேட்டு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் X தளத்தில், “பர்மிங்காமில் ஒரு பெண் மகத்தியால் குத்தப்பட்டதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் எடுத்த “விரைவான முயற்சிகளுக்கு நன்றி” என்று தெரிவித்ததோடு, தகவல் தெரிந்த சாட்சிகள் 101 என்ற எண்ணை அழைக்குமாறு வலியுறுத்தினார்.
ரஃபேல் திங்கட்கிழமை பர்மிங்காமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அல்லது ரஃபேலின் நடமாட்டம் குறித்து அதிகம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு West Midlands பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.