இங்கிலாந்தில் அகதிளுக்கு நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இனிமேல் அகதி தஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொருவம் அவரது சொந்த நாடு பாதுகாப்பானது எனக்கருதப்படும் போது, அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதனடிப்படையில், அகதிகளுக்கான தஞ்சங்களை இனிமேல் தற்காலிகமாகவே வழங்க முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், இதனால் இனி மேல் அகதிகள் இங்கிலாந்தில் நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை ஆகிய நிலைகளை எட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.