செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்கா – சவுதி அரேபியா தற்காப்பு உடன்பாடு; F-35 போர் விமானங்களை வழங்குகிறார் டிரம்ப்

அமெரிக்கா – சவுதி அரேபியா தற்காப்பு உடன்பாடு; F-35 போர் விமானங்களை வழங்குகிறார் டிரம்ப்

0 minutes read

அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் தற்காப்பு உடன்பாட்டை செய்துகொண்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அத்துடன், இஸ்ரேலைப் போலவே சவுதி அரேபியாவுக்கும் அதிநவீன F-35 போர் விமானங்கள் வழங்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்த பின் அவர் மேற்படி தெரிவித்தார்.

பட்டத்து இளவரசர் முகமது சல்மான் ஏழு ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.

மத்திய கிழக்கில் F-35 போர் விமானங்களை இஸ்ரேல் மட்டுமே தற்போது வைத்திருக்கிறது.

சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இரண்டுமே அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் என டிரம்ப் தெரிவித்தார்.

இளவரசர் முகமது சல்மான், அமெரிக்காவில் ஒரு டிரில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் ரியாத்துக்கு டிரம்ப் சென்றபோது 600 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாக சவுதி அரேபியா வாக்குயளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.