செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலங்கையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்பு குழு வருகை!

இலங்கையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்பு குழு வருகை!

0 minutes read

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க உதவும் பொருட்டு இந்திய மீட்புக் குழுவின் இன்று (29) இலங்கை வந்துள்ளனர்.

விமானம் மூலம் வருகை வந்த இந்திய மீட்புப் பணிக் குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையின் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்தப் போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இலங்கையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்பு குழு வருகை!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.