செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நெருக்கடி காலத்தில் தொடர்பில் இருக்க இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஸ்டார்லிங்க்!

நெருக்கடி காலத்தில் தொடர்பில் இருக்க இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஸ்டார்லிங்க்!

0 minutes read

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடரால் பல இடங்களில் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும் செல்வந்தர் எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

டிஜிட்டல் அமைச்சின் தலையீட்டால் இது முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகினது.

ஸ்டார்லிங்க்கின் சகல இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசெம்பர் மாத இறுதி வரை இலவச சேவையை வழங்குவதாக ஸ்டார்லிங்க் அறிவித்துள்ளது.

செயலில் உள்ள (Active) மற்றும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட (Suspended) கணக்குகள் அனைத்துக்கும் தானாகவே சேவை கிரெடிட்கள் வழங்கப்பட்டு, இந்த நெருக்கடி காலத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க உதவி செய்யப்பட்டுள்ளது.

இந்த சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தனது எண்ணங்களும் ஆதரவும் இருப்பதாக ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More