செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாளை இந்தியாவுக்கு பயணிக்கும் புட்டின்; போர் விமானங்களை விற்பது குறித்து பேசுவார்!

நாளை இந்தியாவுக்கு பயணிக்கும் புட்டின்; போர் விமானங்களை விற்பது குறித்து பேசுவார்!

0 minutes read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நாளை வியாழக்கிழமை (04) இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளார்.

இதன்போது, இந்தியாவுக்கு ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் விற்பது குறித்து புட்டின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, எரிசக்தி மற்றும் தற்காப்புத் திறன் மேம்பாடு குறித்தும் அவர் இந்தியத் தலைவர்களுடன் பேச்சுநடத்தவுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பின் இந்தியா தொடர்ந்து அதன் சொந்த நலன்களை விட்டுக்கொடுக்காமல், ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.

ஆனால், ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவருகிறது. ரஷ்யா மீதான தடைகள் கடுமையாக்கப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூவாண்டுகளில் இல்லாத அளவில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையிலேயே, ரஷ்ய ஜனாதிபதி புட்டின், இந்தியா பயணிக்கின்றனார். அவருடன் தற்காப்பு அமைச்சரும் வர்த்தக, தொழில்துறை சார்ந்தோரும் செல்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.