ரஷ்யா -உக்ரேன் போர் நிலவும் சூழலில் தேசியத் தற்காப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், ஜெர்மானிய நாடாளுமன்றம் ஜெர்மனியில் 18 வயது நிரம்பிய ஆண்களை தேசிய சேவையில் கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரியில் அது குறித்த கேள்விப்படிவத்தை ஆண்கள் பெறுவர். தேசிய சேவையில் சேர அவர்கள் அதில் விருப்பம் தெரிவிக்கலாம். பெண்கள் சேர்வது கட்டாயமில்லை.
போதுமான எண்ணிக்கையில் ஆண்கள் சேராவிட்டால், இத்தேசிய சேவை கட்டாயமாக்கப்படலாம்.
எனினும், ஜெர்மானிய இளைஞர்கள் இந்த முடிவை எதிர்க்கின்றனர். போரில் ஈடுபட விருப்பமில்லை என்று கூறி, 90 நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போரில் ஈடுபடுவதால் எதிர்காலமும் வாழ்வாதாரமும் அழிந்துபோகும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.