செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் மன்னர் கிரீடத்தின் மீது உணவுப்பொருளை வீசி Take Back Power குழு ஆர்ப்பாட்டம்!

இலண்டனில் மன்னர் கிரீடத்தின் மீது உணவுப்பொருளை வீசி Take Back Power குழு ஆர்ப்பாட்டம்!

0 minutes read

இங்கிலாந்து மன்னரின் கிரீடம் வைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தின் மீது உணவுப் பொருள்களை எறிந்ததாக நால்வர் கைது செய்யப்பட்டனர்.

Take Back Power என்றழைக்கப்படும் குழு இந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது.

செல்வந்தர்கள் மீது இன்னும் கூடுதலான வரியை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

சம்பவத்தில் கிரீடத்தில் இருந்த நகைகள் சேதமடையவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக டவர் ஆஃப் லண்டனின் (Tower of London) ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சோதனைக்குப் பிறகு Jewel House தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்ஸின் கிரீடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகைதருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், Take Back Power குழுவின் இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஆகும். கடந்த புதன்கிழமை (டிசெம்பர் 3) மூவர், Ritz ஹோட்டலின் முதல் மாடியில் குப்பையைக் கொட்டினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.