புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் தொடர்ச்சியாக ஒப்பந்தங்களை இங்கிலாந்து மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, புலம்பெயர்தலைத் தடுக்கக் கூடிய புதிய ஒப்பந்தம் ஒன்றில்இங்கிலாந்தும் கிரீஸ் நாடும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில், இங்கிலாந்து உள்துறை அமைச்சரான யுவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான George Gerapetritis ஆகியோர், கிரீஸ் தலைநகரான ஏதென்ஸ் நகரில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மனிதக் கடத்தல் கும்பல்களை திறம்பட எதிர்கொள்ள உதவும் என யுவெட் கூப்பர் தெரிவித்தார். குறிப்பாக, ஆங்கிலக் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறிய படகுகள் விநியோகத்தைத் தடுக்க கிரீஸ் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இங்கிலாந்து வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இவ்வகை சர்வதேச ஒத்துழைப்புகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவும், மனிதக் கடத்தலை தடுப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இரு நாடுகளும் தெரிவித்தன.