செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சென்னை விமான நிலையத்தில் ரசிகர் கூட்டத்தில் தடுமாறி விழுந்த நடிகர் விஜய்!

சென்னை விமான நிலையத்தில் ரசிகர் கூட்டத்தில் தடுமாறி விழுந்த நடிகர் விஜய்!

1 minutes read

சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறச் சென்றபோது நடிகர் விஜய் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் நேற்று இரவு முதல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.

மலேசியாவில் நடைபெற்ற தனது திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பிய விஜய்யை வரவேற்க, விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவரைச் சுற்றி கூட்டம் அதிகரித்த நிலையில், காருக்குள் ஏற முயன்ற போது அவர் தடுமாறி தரையில் விழுந்தார். இது காட்சி அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே பாதுகாப்பு அதிகாரிகள், விஜய்யை தூக்கி எழுப்பி, பாதுகாப்பாக காரில் ஏற்ற உதவினர். இதில் அவர் காயமடைந்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் விஜய், மலேசியா சென்றிருந்தார். அந்த விழாவில், இது தான் தனது கடைசித் திரைப்படம் எனக் கூறிய அவர், ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் அரங்கத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.