செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மலேசியாவில் விரைவில் UPI கட்டண முறை அறிமுகம் – பிரதமர் மோடி அறிவிப்பு

மலேசியாவில் விரைவில் UPI கட்டண முறை அறிமுகம் – பிரதமர் மோடி அறிவிப்பு

0 minutes read

இந்தியாவின் மின்னியல் பணப் பரிவர்த்தனை முறையான UPI விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் எட்டு நாடுகளில் இந்த UPI கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இரு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் மின்னியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பராக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடியின் இந்த பயணம் இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நீண்டகால வலுவான நட்புறவின் அடையாளமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.