செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைனில் தேர்தல் அறிவிப்பு சாத்தியம்: அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் புதிய அரசியல் மாற்றம்

உக்ரைனில் தேர்தல் அறிவிப்பு சாத்தியம்: அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் புதிய அரசியல் மாற்றம்

1 minutes read

ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கி நான்காவது ஆண்டை எட்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான சமாதான ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அமெரிக்கா ஜூன் மாதத்தை காலக்கெடுவாக முன்வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், உக்ரைனில் நடைபெறக்கூடிய அரசியல் மாற்றங்கள் போரை சமாதான திசைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால், இந்த நிபந்தனையை உக்ரைன் அரசு உறுதியாக மறுத்துள்ளது.

மேலும், கிழக்கு உக்ரைனில் முக்கியமான போக்குவரத்து மையமாக கருதப்படும் போக்ரோவ்ஸ்க் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.