அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடும் பனிப்புயல் வீசக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை நாளை (23) திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறைந்தது 13 முதல் 18 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில பகுதிகளில் இதைவிட அதிக அளவு பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் இந்த பனிப்புயல் உருவாகியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலைமையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூயார்க் நகரத்திற்கு பனிப்புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.