செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இயக்குநர்கள் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினர்

இயக்குநர்கள் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினர்

1 minutes read

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரியின் இறுதிச்சடங்கு இன்று (07) நடைபெறுகின்றது.

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சௌவுத்ரி.

இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம்.

அண்மையில் அங்கு சென்ற அவர், செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

அதில் சிக்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவருக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஆர்.பி.சௌவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

ஆர்.பி.சௌவுத்ரியின் இறுதிச் சடங்கு கிருஷ்ணாம்பேட்டையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.