பிரான்ஸில் கால்ப்பந்து சாம்பியன்ஸ் லீக் (Champions League) வெற்றிக் கொண்டாட்டங்கள் அத்துமீறியதால் 400க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
Paris Saint-Germain இறுதிச்சுற்றில் வெற்றிவாகை சூடியது. அது ஆர்சனல் (Arsenal) அணியுடன் மோதியது.
பிரான்ஸ் இரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அது விரைவில் விபரீதமானது.
சிலர் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர். பஸ் நிலையம், வாகனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்தினர்.
ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க அவர்கள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.
ரசிகர்களுடனான மோதலில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் காயமுற்றனர். பாரிஸில் மட்டும் 280க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
Paris Saint-Germain இன் கடந்த ஆண்டு வெற்றிபெற்றபோதும் ரசிகர்களின் கொண்டாட்டம் அத்துமீறியது.
அது மீண்டும் நேரலாம் என்று எதிர்பார்த்த பொலிஸ் அதிகாரிகள், இவ்வாண்டு பாரிஸில் சில ரயில், பஸ் சேவைகளை நிறுத்திவைத்திருந்தனர்.