செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்: ஈரானிய தூதுவருக்கு பிரான்ஸ் அவசர அழைப்பு

பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்: ஈரானிய தூதுவருக்கு பிரான்ஸ் அவசர அழைப்பு

1 minutes read

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பித்தல் நிலையத்தை ஈரானிய அதிகாரிகள் பூட்டி முத்திரையிட்டதை அடுத்து, பிரான்ஸிலுள்ள ஈரானிய தூதுவரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கவுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்நடவடிக்கைக்கு எதிராக உரிய பதில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கல் கொன்பவ்ரோ விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈரானில் அமைந்துள்ள பிரான்ஸின் கலாசார நிறுவனம் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுடன் நியாயப்படுத்த முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் சில பிரெஞ்சுப் பிரஜைகள் தெஹ்ரானில் தடுத்து வைக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து பாரிஸ் விலகி நின்றமை ஆகிய காரணங்களால் உறவுகள் ஓரளவு சுமுகமடைந்தன.

எனினும், கடந்த கோடை காலத்தில் இரண்டு பிரெஞ்சு இராஜதந்திரிகள் ஈரானில் கைது செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை மீண்டும் தீவிரமடைந்தது. இதற்குப் பதிலடியாக பிரான்ஸும் ஈரானிய இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது.

இவ்வாறானதொரு தீவிர இராஜதந்திர முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே பிரெஞ்சு கலாசார நிலையம் மூடப்பட்ட மேலுமொரு சம்பவம் தற்போது பதிவாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.