கொத்து கொத்தாய் கொரோனா மரணம்: குதூகலத்தில் வூகான்.

சினாவில் கொரோனா தொற்றின் மூலாதாரப் பகுதியான வூகானில் 76 நாட்களுக்குப் பின் முதன்முறையாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.பல்லாயிரம் மக்கள் உயிரிழக்கவும், பல லட்சம் மக்கள் பாதிக்கப்படவும் காரணமாக இருந்த கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது.

நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் வூகான் நகரம் வெளித் தொடர்பினின்றும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.இந்நிலையில் கொரோனாத் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு 76 நாட்களாக நீடித்து வந்த ஊரடங்கு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.தொடர்ந்து அப்பகுதி மக்கள் வெளியே செல்வதற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் 76 நாட்களுக்குப் பின் வந்த முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஆசிரியர்