September 27, 2023 1:07 pm

ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு ;அச்சத்தில் அரசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பங்களாதேஷ் நாட்டில், அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் 1லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இஸ்லாமிய அமைப்பின் தலைவர், இறந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த இவ்வாறு மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

அந்நாட்டின் பிரதம அமைச்சரின் சிறப்பு உதவியாளர், Shah Ali Farhad மற்றும் Brahmanbaria மாவட்ட காவல்துறை செய்தி தொடர்பாளர் Imtiaz Ahmed இதை உறுதி செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் தலைவராக Maulana Zubayer Ahmad Ansariன் இறுதி சடங்கு தொழுகைக்கு 5பேருக்கு மேல் வரக்கூடாதென்று அறிவுறுத்திய நிலையில், கட்டுக்கடங்காத மக்கள் வந்து கூடியுள்ளனர்.

Brahmanbaria மாவட்டத்தில் மக்கள், சாலைகளை அதிகளவில் நிரம்பியதால் அதை கட்டுப்படுத்த இயலாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் தற்போதுவரை 2,456பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 91பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், பரிசோதனை கருவிகள் குறைப்பாட்டால் குறைந்த அளவில் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக அளவில் மக்கள் கூடியது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்