பிரான்சில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினை சீரமைக்க பல பகுதிகளிலும் இருந்து நிதி குவிந்த வண்ணமுள்ளது.
பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் கோபுரத்தைவிட இந்த தேவாலயத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை.
தேவாலயத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் காரணமாக தீப்பிடித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் உண்மையான காரணத்தை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரான்சை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மட்டும் 300 மில்லியன் யூரோ வழங்கி தேவலாயத்தை புனரமைப்பதற்காக உதவி செய்தமை குறிப்பிடத்தக்கது.
