இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் ரஷ்யாவில் உயிரிழந்தது.
சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட 84 வயது முதலை 1936ம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த அந்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் இறந்து போனதால் அங்கிருந்து 1946ம் ஆண்டில் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அந்த முதலை மாஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. சர்வாதிகாரி ஹிட்லர் இறந்து 75 வருடங்கள் ஆன நிலையில் அவர் வளர்த்ததாகக் கூறப்படும் சார்ட்டனும் தனது 84வது வயதில் உயிரிழந்தது.
இருப்பினும் அந்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது.