தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – எடப்பாடி

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிலை அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோபி செட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளதுடன் ஈரோட்டில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்   தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளதுடன், மின்கட்டண கணக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்