செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கொரோனாவால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனாவால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

0 minutes read

கொரோனா தொற்றால் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த  ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் “பால் ஸ்வராஜ் கொவைட் கோ” என்ற வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி காணொலி வாயிலான கூடத்தினை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.