புதுடெல்லி: பொதுவெளியில் குற்றவியல் விவரங்களை வெளியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்க வேண்டும் என தொடரப்பட்ட மனு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் நிலை உள்ளது.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வின் முன்னிலையில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார்.