செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜபல்பூர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்

ஜபல்பூர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்

0 minutes read

55 பயணிகளுடன் சென்ற விமானம், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற சம்பவத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

இன்று காலை 11.30 மணி மணியளவில் டெல்லியில் இருந்து அல்லையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஏடிஆர்-72 ரக விமானம் ஜபல்பூருக்கு புறப்பட்டது. பிற்பகல் 1.15 மணிக்கு அந்த விமானம் ஜபல்பூரில் தரையிறங்கிய போது, எதிர்பாராவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகி மண் தரைக்கு சென்றது.

இதனை அடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவர்கள் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அல்லையன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.