மும்பையில் கொரிய பெண் துஸ்ப்பிரயோகம் | உதவ முன் வரும் வெளிவிவகார அமைச்சகம்.

மும்பையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் தொடர்பில் தென்கொரிய தூதரகம் தொடர்பு கொண்டால் இந்திய வெளிவிவகார அமைச்சு முழு உதவி செய்யவோம் என கூறியுள்ளது.

தென்கொரிய பெண் ஒருவர் தனது யூடிப் செனலுக்காக வீடியோக்களை இந்தியாவில் எடுத்து வந்துள்ளநிலையில் கடந்த செவ்வாய் இரவு 11.30 மணி அளவில் மும்பாய் கர் பகுதியில் லைவ் ஸ்ட்ரீம் எடுத்து கொண்டிருந்த பொது அந்த பெண்ணிடம் இரு இளைஞர்கள் சேட்டை செய்து முத்தமிட முயற்சித்துள்ளார்கள் இதனால் அந்த பெண் தப்பியோடியுள்ளார் இந்த வீடியோ தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது இது அனைவராலும் விமர்சனத்துக்குள்ளானதுடன் அந்த இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தனர் .தொடர்ந்து 19 ,21 வயதுடைய அந்த ஆடவர்கள் பொலிசால் கைது செய்யப்பட்டனர்.

இவை நடந்து சில நாட்களுக்கு பின் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சகம் அந்த பெண்ணுக்கு கொரிய தூதரகம் கேட்டு கொண்டால் உதவ உள்ளதாக கூறியுள்ளது.

ஆசிரியர்