220 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
பங்கதெனிய பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக வாகனத்தில் கொண்டு செல்லும் போது சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இந்த நிலையில், குறித்த பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் ஏனைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
